×

சுகத்தை தரும் சுக்கிர கவசம்!

ஸ்ரீ ஸுக்ர கவசம் - 17

வெற்றி மேல் வெற்றி தரும்  கவசங்கள்

நவக்கிரகங்களில் சுக்கிரன் களத்திரகாரகன். பஞ்சகோண பீடத்தை உடையவர். அசுரர்களுக்கு குருவாக விளங்குபவர். மழை பெய்ய உதவுபவர். திருமணம், களத்திரம்
இவற்றிற்கு அதிபதி. பஞ்சபூதங்களில் நீர். அந்தண குலத்தை சேர்ந்தவர். அமிர்த சஞ்சீவி மந்திரத்தின் மூலம் இறந்து போன அசுரர்களுக்கு உயிர் கொடுத்தவர்.

இவருடைய தசாபுத்திகள் நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பர். ஒருவர்க்கு நல்ல காலம் இருந்து வந்தால் சுக்கிரதசை அடிக்கிறது என்று நாம் சொல்வது வழக்கம். அனைத்து சாஸ்திரங்களுக்கும் சங்கீத வித்தைகளும், ம்ருத சஞ்ஜீவினிக்கும் இவர் இருப்பிடம், வெள்ளிக்கிழமை இவருக்கு விசேஷமான நாள், அம்பாள் பூஜை

இவருக்கு உகந்தது, சுக்ர செய்திரம்
ஸ்ரீ ரங்கம், மூர்த்தி ஸ்ரீ ரங்கநாதர்.
ஸ்ரீ ஸுக்ர கவச ஸ்தோத்ரம் (த்யானம்)
ஸுக்ரம் சதுர்புஜம் தேவம் ஸாக்ஷமாலா
கமண்டலும் |

தண்டஹஸ்தஞ்ச வரதம் த்யுதிஜால
ஸுஸோபிதம் ||
ஸுக்லாம்பரதரம் பூஜ்யம் ஸுக்ல மால்யானுலேபனம் |
வஜ்ராபரண ஸம்யுக்தம் கிரீட மகுடோஜ்ஜ்வலம் ||

ஸ்வேதவாஹ ரதாரூடம் மேரும் யாந்தம்
ப்ரதக்ஷிணம் |
பஞ்சாஸ்ரமண்டல கதம் பத்மஸ்த்தம்
சிந்தயாம்யஹம் ||

ம்ருணால குந்தேந்து பயோ ஹிமப்ரபம்
ஸிதாம்பரம் ஸ்னிக்த வலக்ஷ மாலினம் |
ஸமஸ்த்த ஸாஸ்த்ர ஸ்ருதி தத்வ தர்ஸனம்
த்யாயேத் கவிம் வாஞ்சித வஸ்து ஸித்தயே ||

(இங்கு ல-மித்யாதி மானஸ பூஜை செய்ய வேண்டும்)
ஸிரோ மே பார்க்வ பாது பாலம் பாது க்ரஹாதிப: |
நேத்ரே தைத்ய குரு: பாது ஸ்ரோத்ரே ஸ்ரீசந்தன த்யுதி: ||
பாது மே நாஸிகாம் காவ்யோ வதனம் தைத்ய வந்தித: |
ரஸனாமுஸனா: பாது கண்டம் ஸ்ரீகண்ட
பக்திமான் ||

புஜௌ தேஜோநிதி: பாது வக்ஷோ யோகவிதாம் வர: |
அக்ஷமாலதரோ ரக்ஷேத் குக்ஷிம் மே ச க்ருபாகர: ||
கடிம் மே பாது விஸ்வாத்மா ஸக்தினீ
ஸர்வபூஜித : |

ஜானுனீ து ப்ருகு: பாது ஜங்கே மே மஹதாம் வர: ||
குல்பௌ குணநிதி: பாது பாதெளமே
பாண்டராம்பர: |
ஸர்வான்யாங்கானி மே பாது ஸுக்ர:
கவிரஹர்நிஸம் ||

(இங்கு அங்கன்யாஸம் செய்ய வேண்டும்)
ய இதம் கவசம் திவ்யம் படேத் ஸ்ரத்தா
ஸமன்வித: |
ந தஸ்ய ஜாயதே பீடா பார்கவஸ்ய ப்ரஸாதத: ||
ஸ்ரீ ஸுக்ர கவச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்||

சங்கம் மல்லிகை சந்திரன்போல் வெளுப்பானவரும், தாமரைத் தண்டு வெள்ளிபோல் காந்தி உள்ளவரும், பசும்பால் போல் வெண்மையானவரும் கோடி ஸூர்யனுக்கு ஸமமானவரும், ஸங்கம்,
சக்ரம், கதை, தாமரை இவைகளை நான்கு கைகளிலும் தரிப்பவரும் கிரீடம் குண்டலம் வநமாலைகளுடன் கூடியவரும், அழகிய முகம், கன்னம், பீதாம்பரம் இவைகளைத் தரித்தவரும் தேவர்களுடன் கூடியவருமான மஹாத்மாவை மனதில் தியானம் செய்கிறேன்.சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த மந்திரத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.

அது என்ன வென்றால், இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் தரும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் அது. சுக்கிரபகவானின் நல்ல குணத்தை கண்டுதான் சிவபெருமான் இந்த மந்திரத்தை சொல்லிகொடுத்தார். இவருடைய வாகனம் கருடன். பெருமாளுக்கு உகந்த கருடவாகனம் பெற்றவர். பார்ப்பதற்கு வெள்ளை உருவமாக இருப்பதால் இவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார். தன் நலத்தைவிட தன்னை நம்பி இருப்பவர்களின் நலமே பெரியதென்று இருக்கும் இவர், உண்மையானவர்  நல்ல மனம் படைத்தவர் என்பதால்  விஷ்ணுபகவான் சுக்கிரபகவானின் மீது மதிப்பு வைத்திருந்தார்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரதசை, இருபது வருடங்கள். இக்காலகட்டத்தில், ஸ்ரீரங்கநாதரை வணங்கினால் சுக்கிரனால் கிடைக்கும் நன்மைகள் தடையின்றி கிடைக்கும். ஒரு வேலை, சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் சரியில்லாமல் இருந்தால், ஸ்ரீரங்கநாதரையும் மகாலட்சுமியையும் வணங்க வேண்டும். பொதுவாக ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லாமல் இருந்தால், கலைத்
துறையில் மேன்மை தராது. அதனால் சுக்கிர தோஷம் இருப்பவர்கள், வெள்ளைத் தாமரையை லட்சுமி படத்தின் முன்வைத்து வணங்கவேண்டும்.

வெள்ளிதோறும் நவகிரக சந்நதியில் இருக்கும் சுக்கிரபகவானின் முன், தாமரை திரி தீபத்தை ஏற்றி சுக்கிர பகவானின் கவசத்தை ஆராதனை செய்து வழிபட்டால், கலைத்துறையில் ஏறுமுகத்தை காணலாம். வெள்ளிக்கிழமையில் மொச்சையை வைத்து வணங்கலாம். ஒருபிடி வெள்ளை சாதத்தில் மொச்சையை கலந்து, காக்கைக்கு வைத்து வந்தால் சுக்கிரதோஷம் நீங்கும். முடிந்தால் வெள்ளிதோறும் மொச்சைப் பருப்பை பத்துபேருக்காவது தானம் கொடுத்தால் இன்னும் பல நன்மைகள் ஏற்படும்.

வெள்ளிதோறும் சுக்கிர பகவானுக்கு பிடித்த இனிப்பை வைத்து வணங்கினால் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரதோஷம் நீங்கும். திருமணத் தடை விலகும். வெள்ளியின் நிறம் வெள்ளை. அது சுக்கிரனின் ஆதிக்கம். சுக்கிரனுக்குரிய வெள்ளியில் செய்த கொலுசை பெண்கள் காலில் அணிந்தால் முகம் பொலிவு பெறும். உடல் வலிமை பெறும். வெள்ளிக்கிழமை தோறும் முழு ஈடுபாட்டுடன் .சுக்கிரனின் கவசத்தை படித்து வணங்கி ஆன்மீக பலன் வாசகர்கள்  சுபிக்ஷம் பெற வேண்டுகிறோம்.

அனுஷா

Tags : Venus ,
× RELATED சிர்கான் (Zircon) எனப்படும் வீனஸ் ரத்தினம்