×

பண்ருட்டியில் ஆட்டோ டிரைவர் கொலை விஷம் குடித்த கள்ளக்காதலி மருத்துவமனையில் சாவு

பண்ருட்டி : பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீசார் விசாரித்ததால் மனம் உடைந்த கள்ளக்காதலி விஷம் குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக இறந்தார்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி காந்தி நகரை சேர்ந்தவர் சக்கரபாணி மகன் சக்திவேல்(32), ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் பண்ருட்டி களத்துமேடு பகுதியை சேர்ந்த சுமன் (25). இவர்கள் இருவருக்கும் பெண்ணுடன் பழகுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் சம்பவத்தன்று தட்டாஞ்சாவடி காளியம்மன் கோயில் செடல் திருவிழா நடந்தது. இதில் கலந்துகொண்ட சக்திவேலும், சுமனும் இரவில் அப்பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுமனும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சக்திவேலை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதுதொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த சுமன், பட்டிஸ்டா குணா, வசந்தகுமார், குணா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் சக்திவேல் மற்றும் சுமனின் கள்ளக்காதலி பூமிகா (24) என்பவர் போலீசார் விசாரணையால் மனஉளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்து விட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பண்ருட்டியில் ஆட்டோ டிரைவர் கொலை விஷம் குடித்த கள்ளக்காதலி மருத்துவமனையில் சாவு appeared first on Dinakaran.

Tags : Sawu ,Kolkadali Hospital ,Pranruti ,PANRUTI ,Chau ,
× RELATED திட்டக்குடியில் நேபாள நாட்டு தொழிலாளி மர்ம சாவு