×

ஸ்ரீலீலா வாய்ப்பை தட்டிப்பறித்த பூஜா ஹெக்டே

தெலுங்கு முன்னணி ஹீரோ ராம் சரண், தற்போது புச்சிபாபு இயக்கத்தில் ‘பெத்தி’ என்ற படத்தில் நடிக்கிறார். விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி வெளியாகும் இப்படத்தில் குத்துப்பாடல் ஒன்று இடம்பெறுகிறது. அப்பாடலுக்கு நடனமாட முதலில் ஸ்ரீலீலா தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால், தற்போது பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ராம் சரண், சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’ என்ற படத்தில் பூஜா ஹெக்டே குத்தாட்டம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ‘பெத்தி’ படத்தில் நடனமாடும் வாய்ப்பை ஸ்ரீலீலாவிடம் இருந்து பூஜா ஹெக்டே தட்டிப்பறித்த விஷயம் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pooja Hegde ,Sri Leela ,Ram Charan ,Puchi Babu ,A.R. Rahman ,
× RELATED 26வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு விக்ரம் நடித்த சேது ரீ-ரிலீஸ் ஆகிறது