×

ஆரோவில் அருகே ஒரே கடையில் அடுத்தடுத்து 11 சிலைகள் மீட்பு: வேறு கடத்தல் சிலைகள் உள்ளனவா என அதிகாரிகள் விசாரணை

விழுப்புரம் : ஆரோவில்லை அடுத்த பொம்மையார்பாளையம் பகுதியில் செயல்படும் பழங்கால சிலைகள் விற்பனை செய்யும் கடையில் இருந்து 3 கற்சிலைகள் உள்பட மேலும் 4 சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 16ம் தேதி விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் பகுதியில் உள்ள கன்னிகா கார்டன் பகுதியில் மெட்டல் கிராப்ட் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் பழங்கால உலோக சிலை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனைகளை அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது. மண்ணுக்கு அடியில் பல சிலைகள் புதைக்கப்பட்டிருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் 7 பழமையான உலோக சிலைகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிலைகள் தொடர்பாக கடையின் உரிமையாளர் ராமச்சந்திரனிடம் விசாரணை செய்த போது இது தொடர்பாக அவரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாத காரணத்தால் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 7 சிலைகள் மீட்கப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அங்கு தேடுதல் பணியில் மேலும், 4 சிலைகள் மீட்கப்பட்டது. இந்நிலையில், 3 கற்சிலைகள், ஒரு உலோகச்சிலை உள்பட 4 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. ஆஞ்சநேயர் சிலை, சிவகாமியம்மன் சிலை, நாகதேவி சிலை மற்றும் சிவன் சிலை ஆகிய 4 சிலைகள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் பகுதியில் உள்ள கடையில் மொத்தம் 11 சிலைகள் மீட்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சிலைகள் எங்கு திருடப்பட்டது, எவ்வளவு காலம் பழமையானது என்பது குறித்து தொடர்ந்து நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

The post ஆரோவில் அருகே ஒரே கடையில் அடுத்தடுத்து 11 சிலைகள் மீட்பு: வேறு கடத்தல் சிலைகள் உள்ளனவா என அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Aro ,Viluppuram ,Palam ,Aaron ,
× RELATED வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்;...