×

அருள் நாதர் இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு அருள்வாக்குகள்

 இதன்பின் அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு தாகமாய் இருக்கிறது என்றார். (யோவான் 19:28) கொலைபாதகர்களான சமய தலைவர்களிடம் அகப்பட்டு நீண்ட நேரம் ஆகிவிட்டதனாலும், அவரை சவுக்கால் அடித்ததினாலும் இரத்தம் வியர்வையாக சிந்தினதால் இயேசுவின் உடலில் நீர் பற்றாக்குறை (dehydration) ஆகிவிட்டதினாலும் `அவருக்குத் தாகம்’ நிச்சயமாய் ஏற்பட்டுவிட்டது. இன்றைக்கு உலக அளவிலே தாகமாயிருக்கிறேன் என்று சத்தமிடாத, ஒலிக்கப்படாத குரல்கள் ஏராளமாக இருக்கின்றன. உலக அளவிலே தண்ணீர் பஞ்சம், வியாபார நோக்கில் பூமியில் உள்ள தாதுக்கள் வெளியேற்றப்படுவதினால் தண்ணீர் பிரச்னை, உணவு, நீர், காற்று இது மூன்றும் உயிர் வாழ்வதற்கான ஆதாரம். கடவுள் இவைகளை எல்லா உயிர்க்கும் இயற்கையாக இலவசமாக தந்துள்ளார். ஆனால், இன்று இவைகள் மனிதனால் விற்பனைப் பொருளாக மாறிவிட்டது. தண்ணீர் ஒரு சமூக பிரச்னை, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்ற நம் இந்திய சமூகத்தில் ஊர் பொதுக் கிணற்றில் சமூகத்தின் அடித்தள மக்கள் தண்ணீரைப் பயன்படுத்துவது குற்றமாக இன்றும் சில இடங்களில் கருதப்படுகிறது. இயேசுநாதர் தன்னை ஏழைகளோடும் ஒடுக்கப்பட்டவர்களோடும் இணைத்துக் கொள்வதனால் இன்றும் இயேசு தாகமாயிருக்கிறார்.

(மத்தேயு 25: 31-46)
  `எல்லாம் நிறைவேறிற்று’ (யோவான் 19:30) யூதசமய, சமூக, அரசியல், பொருளாதாரம் மக்களை அடிமைப்படுத்துகிற ஒன்றாக இருக்கிறது. எனவே, ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் எண்ணத்தோடு தன்னைத் தலைவராக கொண்டு இயேசு நாதர் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். அந்த சமத்துவ சமுதாயத்திற்கு `இறையரசு’ என்று பேரிட்டார். இறையரசு என்பது இறையாட்சி. ரோம திருச்சபைக்கு பவுல் எழுதிய கடிதத்தில் ரோம அரசை விட இறையரசின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். இறையரசு அல்லது இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக்கொண்டதல்ல. மாறாக, தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது (ரோமர் 4:17). `கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளதல்லவா’ என்று இயேசு கூறுகிறார். இங்கு பேய்கள் என்பது சமய, சமூக தீவினைகள். இயேசுவின் இயக்கம் இறையாட்சியை இறையரசை உருவாக்குவதற்கே. இறையாட்சி இப்போது வந்துள்ளது. (லூக்கா 11:20) என்பதை எண்ணிய
வராய் சிலுவையிலே என் பணி நிறைவேறிற்று என்று சொல்லி ஒரு நிறைவை, நிம்மதியை இயேசுநாதர் அடைகிறார்.

 தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன். (லூக்கா 23:46) கடவுள்தான் உயிரைக் கொடுக்கிறார், எனவே அந்த உயிரைக் கடவுளிடத்தில் திருப்பி கொடுக்க வேண்டியது அவரது பொறுப்பு. எனவே யாரும் யாருடைய உயிரையும் பறிக்கக்கூடாது. மற்றவர்களின் உயிர்களைப் பறிப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. அதுமட்டுமல்லாமல் தன் உயிரை தானே பறிப்பதற்கு கூட உரிமை கிடையாது. ஆக கொலை, தற்கொலை இரண்டுமே செய்யக்கூடாது. உயிரைக் கொடுத்தவரால் மட்டுமே உயிரை எடுக்கமுடியும். கடவுள் நம் உயிரை எடுக்கும் வரையில் பொறுமையோடு இருக்க வேண்டும். இங்கு அருள் நாதர் தாமாகதான் தன் உயிரை கடவுளிடத்தில் ஒப்படைக்
கிறார். `என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை நானாகவே அதைக் கொடுக்கிறேன்’ என்று இயேசு மொழிகிறார். `உன் உயிர் என் கையில்தான் இருக்கிறது’ என்று மிரட்டுகிற உலகத்திலே, உயிர் கடவுளின் கையில் தான் இருக்கிறது என்பதுதான் உண்மை. எனவே யாரும் யாருடைய உயிரையும் எடுக்கக் கூடாது. அவரவர் தம் உயிரை கடவுளிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.

Tags : Lord ,Jesus ,
× RELATED கும்பாபிஷேகம் பண்ணும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே; ஏன்?