×

100 நாள் வேலை வழங்க மறுப்பு: திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் பனங்காட்டுபாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் தனசேகரன், ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார் ஆகியோர் பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பலரும் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ்  பணியாற்றிவந்த பனங்காட்டுப்பாக்கம், புங்கேரி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை தர முடியாது என்றும் வேலைக்கு வரக் கூடாதும் என்றும் ஊர்கூட்டம் போட்டு முடிவு செய்திருப்பதாகவும் திமுகவில் சேர்ந்தவர்களுக்கு வேலை தர முடியாது என்று சொல்லி வேலைக்கு வருவதை அதே பகுதியை சேர்ந்த சிலர் தடுத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து இன்று காலை 10 மணி அளவில், ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன், ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார், பணிதள பொறுப்பாளர் நாகலட்சுமி ஆகியோருடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ‘’சாதி, கட்சி பாகுபாடு பார்க்காமல் தங்களுக்கும் 100 நாள் வேலையை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். பின்னர் ஒன்றிய ஆணையாளர் பூ மகள் தேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை புத்தகங்களை ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் திரும்ப ஒப்படைத்தனர். இதன்காரணமாக திருப்போரூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது….

The post 100 நாள் வேலை வழங்க மறுப்பு: திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Refusal ,Tiruppurur union ,Tiruporur ,Tiruporur Union Panangatupakkam ,Panchayat ,Council ,Dhanasekaran ,Union Councilor ,Arunkumar ,BAMAK ,DMK ,Tiruporur Union ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு திருப்போரூர்...