×

முல்லை நகரில் கஞ்சாவுடன் ரவுடி கைது

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பி.கல்யாணபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் விக்ரம் (36). இவர் வியாசர்பாடி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையில் போலீசார் முல்லை நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்குள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த விக்ரமை கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post முல்லை நகரில் கஞ்சாவுடன் ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Mullai Nagar ,Perambur ,Vikram ,Vyasarpadi B. Kalyanapuram 2nd Street, Chennai ,Vyasarpadi ,
× RELATED சேலம்: ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்