×

அழிந்து போய் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் சிவிங்கி புலிகள்: மபி உயிரியல் பூங்காவில் மோடி திறந்து விட்டார்

சியோபூர்: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளை மத்திய பிரதேசத்தின் குனோ உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார்.இந்தியாவில் வாழ்ந்து வந்த சிவிங்கிப் புலிகள் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952ம் ஆண்டு ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து 3 ஆண், 5 பெண் சிவிங்கி புலிகளை இந்தியா கொண்டு வர 2009ல் திட்டமிடப்படப்பட்டது. அதன்படி, போயிங் 747 சிறப்பு சரக்கு விமானம் மூலமாக 8 சிவிங்கி புலிகள், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, 2 ஹெலிகாப்டர் மூலமாக சியோப்பூரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவுக்கு அவை கொண்டு வரப்பட்டன. பிரதமர் மோடி நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு கூண்டில் இருந்து அவற்றை திறந்து விட்டார்.இந்தியாவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கால் பதித்த சிவிங்கிப் புலிகளை பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இவற்றின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இவற்றின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும், இவற்றின் பாதுகாப்பிற்காக குனோ பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிவிங்கி புலிகளை திறந்து விட்டு மோடி பேசுகையில், ‘‘1952ம் ஆண்டிலேயே சிவிங்கிப் புலிகள் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில் அவற்றை மீண்டும் கொண்டு வர எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது, புதிய வீரியத்துடன் சிவிங்கிப் புலிகள் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை வழங்கிய நமீபியாவுக்கு நன்றி,’’ என்றார்….

The post அழிந்து போய் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் சிவிங்கி புலிகள்: மபி உயிரியல் பூங்காவில் மோடி திறந்து விட்டார் appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,Mabi Zoo ,Seopur ,Namibia ,Kuno Zoo, Madhya Pradesh ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி