×

நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த சரக்கு போக்குவரத்து செலவை குறைக்கணும் கட்கரி அறிவுரை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இளம் இந்தியர்கள் மற்றும் இந்திய பட்டய கணக்கர்கள் நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அதில், அவர் பேசியதாவது: நமது முதல் முன்னுரிமை நீர்வழி போக்குவரத்துக்கு தான். 2வதாக ரயில் போக்குவரத்து, மூன்றாவது சாலை மற்றும் கடைசியாக வான்வழி போக்குவரத்தாகும். இந்தியாவில் சரக்கு போக்குவரத்து செலவானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதமாக உள்ளது. இது மிகவும் அதிகம்.நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு இந்த  செலவை குறைக்க வேண்டும். சீனாவில் இந்த செலவானது 10 சதவீதமாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 8 சதவீதமாக உள்ளன. பிரதமரின் கதி சக்தி திட்டம், பல்வேறு துறைகளை ஒன்றிணைப்பதற்கு உதவும். ரயில்,  சாலை போக்குவரத்தை நீர்வழி தடத்துடன் இணைப்பது அவசியம். பயோ டீசல், பயோ -இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்துவது பெட்ரோல், டீசல் இறக்குமதியை குறைக்க உதவும். இவ்வாறு அவர் பேசினார். …

The post நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த சரக்கு போக்குவரத்து செலவை குறைக்கணும் கட்கரி அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Gadkari ,Kolkata ,Kolkata, West Bengal ,Indians ,Institute of Chartered Accountants of India ,
× RELATED வலுவான கூட்டணி ஆட்சி இருக்கிறது பொது...