×

தவணை கட்டாததால் வாகனம் பறிமுதல்; 3 மாத இளம் கர்ப்பிணி பெண் டிராக்டரை ஏற்றி படுகொலை: தனியார் நிதி நிறுவனம் கொடூரம்

ஹசாரிபாக்: ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முக்தி மோர்ச்சாவை சேர்ந்த ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். இம்மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள பரியாநாத் என்ற இடத்தை சேர்ந்தவர் மிதிலேஷ் மேத்தா. மாற்றுத் திறனாளியான இவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கினார். ஆனால், தொழில் நிலை சரியாக இல்லாததால் தவணையை செலுத்த முடியவில்லை. இதனால், கடந்த வியாழக்கிழமை இவருடைய டிராக்டரை நிதி நிறுவனத்தின் ஏஜென்டுகள் பறிமுதல் செய்தனர்.அதை மிதிலேஷ் தடுத்தார். ரூ.1.30 லட்சம் பாக்கியை முழுமையாக செலுத்தினால் வாகனத்தை தருவதாக ஏஜென்டுகள் தெரிவித்தனர். ஆனால், உடனடியாக ரூ.1.20 லட்சம் தருவதாக மிதிலேஷ் தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த ஏஜென்டுகள் டிராக்டரை ஓட்டிச் செல்ல முயன்றனர். அப்போது, மிதிலேசும், அவருடைய 27 வயது மகளும் அதை தடுத்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஏஜென்டுகள் டிராக்டரை பெண் மீது ஏற்றினர். இதில் அவர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அப்பெண் 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். இது தொடர்பாக, நிதி நிறுவனத்தின் மானேஜர், நிதி வசூல் ஏஜென்ட் உட்பட  4 பேர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

The post தவணை கட்டாததால் வாகனம் பறிமுதல்; 3 மாத இளம் கர்ப்பிணி பெண் டிராக்டரை ஏற்றி படுகொலை: தனியார் நிதி நிறுவனம் கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Hazaribagh ,Jharkhand Mukti Morcha ,Congress alliance ,Jharkhand ,Mukti Morcha ,
× RELATED காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்...