×

மகளிர் கிரிக்கெட்: முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இங்கிலாந்து மோதல்

ஹோவ்: இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 1-2 என்ற கணக்கில் போராடி தோற்றது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி ஹோவ் கவுன்டி மைதானத்தில் இன்று நடக்கிறது. டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. அதே சமயம் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரையும் வசப்படுத்தி அசத்த அமி ஜோன்ஸ் தலைமையில் இங்கிலாந்து வீராங்கனைகள் வரிந்துகட்டுகின்றனர். டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய புதுமுக வீராங்கனைகள் ஆலீஸ் கேப்சி, ஃபிரெயா கெம்ப் ஆகியோர்  ஒருநாள் தொடரிலும் அறிமுகமாக உள்ளனர். வெற்றிக் கணக்கை  தொடங்க 2 அணிகளும் மல்லுக்கட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), சிம்ரன் பகதூர், யஸ்திகா பாட்டியா, டானியா பாட்டியா, ஹர்லீன் தியோல், ராஜேஷ்வரி கெயக்வாட், ஜுலன் கோஸ்வாமி, தயாளன் ஹேமலதா, சப்பினேனி மேகனா, மேஹ்னா சிங், ஸ்நேஹ் ராணா, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிகியூஸ், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராகர்.இங்கிலாந்து: அமி ஜோன்ஸ் (கேப்டன்), கேத் கிராஸ், சோபி எக்லெஸ்டோன், டாமி பியூமான்ட், பிரெயா டேவீஸ், பிரெயா கெம்ப், லாரென் பெல், ஆலிஸ் டேவிட்சன், எம்மா லேம்ப், மயா பவுசியர், சார்லி டீன், இஸ்ஸி வாங், ஆலிஸ் கேப்ஸி, சோபியா டங்க்லி, டானி வியாட்….

The post மகளிர் கிரிக்கெட்: முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இங்கிலாந்து மோதல் appeared first on Dinakaran.

Tags : India ,England ,Howe ,Dinakaran ,
× RELATED ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை...