சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

சனி என்றால் ஒரு தனி பயபக்தி என்பது உலக வழக்கம் . இவருக்கு ஈஸ்வரன் என்ற நாமம் சேர்ந்து கொள்கிறது. ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் நின்று சஞ்சாரம் செய்யும் இவர்.முன் ராசியிலும் , பின் ராசியிலும் சேர்ந்து ஏழரை வருடங்கள் மனிதர்களை பிடிக்கும் போது ஏழரை நாட்டுச்  சனி பிடித்திருப்பதாகவும்  கூறுவர். 8-ம்  இடத்திற்கு வரும்போது அஷ்டமத்து சனி என்பர். இவர் ஸ்தோத்திர பிரியர். சனிக்கிழமைகளில் விரதம். ஸ்தோத்திரம், எள், நெய் தீபம் ஏற்றுதல், முதலியவைகளால் சனிப்ரீதி செய்வது வழக்கம். சனியை போல் கொடுப்பவரும் கிடையாது , கெடுப்பவரும் கிடையாது என்பர் .சனிக்கு திருநள்ளாறில் தனி கோயில் உண்டு.  

சனீஸ்வரன் என்பவர் இந்து சோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இவர் சூரிய தேவன் - சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக / மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் வழங்கப்படுகிறது.

சனீஸ்வரனுக்கும் கருமை நிறத்திற்குமான குறியீடு கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் சனீஸ்வரனுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன. இவற்றோடு சனீஸ்வரனின் வாகனமாக கருதப்படும் காகமும் கருமை நிறமுடையதாகும். இவ்வாறு பல்வேறு பட்ட குறியீடுகள் கருமை நிறம் கொண்டவையாக உள்ளன.

இவை இருள் சூழ்ந்த பாதாள உலகத்தினைக் குறிப்பதாகவும் கருத இடமுண்டு. கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பு ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில்- காற்று. ஊழியர்களைப் பிரதிபலிப்பவர். பாப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர். இவரின் நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி. உலோகப் பொருள்களில் - இரும்பு இவருடையது. கிரக ரத்தினங்களில் நீலக்கல் இவருடையது. லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், சரளமான பணவருவாய், பெயர்-புகழ் மற்றும் அரசியல் செல்வாக்கு கிடைக்கும். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

சனைச்சர் கவசம்

ஓம் அஸ்ய ஸ்ரீ  ஸனைஸ்சர கவச மஹாமந்த்ரஸ்ய. காஸ்யபரிஷி: அநுஷ்டுப் சந்த: ஸனைஸ்சரோ தேவதா.

ஸம் பீ4ம் நம்-ஸக்தி: மம்-கீலகம் மம ஸனைஸ்சர ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

த்யானம்

சதுர்புஜம் ஸநிம் தேவம் - சாப தூணீக்ருபாணகம் |

வரதம் பீமதம்ஷ்ட்ரஞ்ச - நீலாங்கம் வரபூஷணம் ||

நீல மால்யா நுலேபஞ்ச - நீலரத்னை: அலங்க்ருதம் |

ஜ்வாலோர்த்வ மகுடாபாஸம் - நீலக்ருத்ர ரதான்விதம் ||

மேரும் ப்ரதக்ஷணம் க்ருத்வா - ஸர்வலோக பயாவஹம் |

க்ருஷ்ணாம் பரதரம் தேவம் - த்விபுஜம் க்ருத்ர ஸம்ஸ்திதம்

ஸர்வ பீடாஹரம் ந்ரூணாம்-த்யாயேத்க்ருஹகணோத்தமம்

ஸனைஸ்சர: ஸிரோரக்ஷேத்-முகம் பக்தார்த்தி நாஸந: |

கர்ணௌ கிருஷ்ணாம்பர: பாது-நேத்ரே ஸர்வ பயங்கர: ||

கிருஷ்ணாங்கோ நாஸிகாம் ரக்ஷேத்-கர்ணம் மே ஸஸி கண்டிஜ: |

புஜெளமேத்விஜே: பாது-ஹஸ்தௌ நீலோத்பலப்ரப: ||

பாதுமேஹ்ருதயம் கிருஷ்ண: குக்ஷிம் ஸுஷ்கோதர: ததா

கடிம்மே விகட: பாது-ஊரூமே கோரரூபவான்

ஜாதுநீ பாதுமே தீர்க்க: - ஜங்கேமே அமங்கலப்ரத: ||

குல்பெள குணாகர: பாது - பாதெளமே பங்குபாதக: |

ஸர்வாணி ச மமாங்காநி - பாது பாஸ்கரநந்தந: ||

ய இதிம் கவசம் நித்யம் - ஸர்வ பீடாஹரம் ந்ருணாம் |

படதி ஸ்ரத்தயாயுக்த: - ஸர்வான்காமான் அவாப்நுயாத் ||

கவச மந்த்ர அர்த்தம்:- அந்தந்தப் பெயர் வாய்ந்த ஸனைஸ்சரன் தலை முதல் சர்வ அவயவங்களையும் ரட்சிக்கட்டும். இந்தக் கவச மந்த்ரத்தை நித்யம் படித்தவருக்கு சகல இஷ்டமும் பூர்த்தியாகும்.

அனுஷா

Related Stories: