×

செல்போனில் ஆண் நண்பருடன் பேச்சு மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை  மாவட்டம் போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(36), கார் டிரைவர். இவரது மனைவி பச்சையம்மாள்(30). இவர்களுக்கு திவ்யா(11). கதிர்வேல்(9) என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி பச்சையம்மாள்  அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பாராம். யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்? என கணவர் கேட்டால் அதெல்லாம் சொல்ல முடியாது என்பாராம். இதனால் மனைவியின் நடத்தை மீது சுரேஷிற்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால், பச்சையம்மாள் கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் சென்று தங்கி இருந்தார். ஆத்திரம் அடைந்த சுரேஷ் கொரால்பாக்கம் கிராமத்திற்கு நேற்று முன்தினம்  சென்று மனைவியின் கழுத்தை அரிவாளால் அறுத்து கொலை செய்தார். போளூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சுரேஷை போலீசார் கைது செய்தனர். …

The post செல்போனில் ஆண் நண்பருடன் பேச்சு மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Suresh ,Anuramangalam village ,Polur ,Tiruvannamalai district ,Pachaiammal ,
× RELATED அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான...