×

ராணி 2ம் எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சீனாவுக்கு திடீர் தடை: இறுதி சடங்கில் மட்டும் பங்கேற்க அனுமதி

லண்டன்: மறைந்த ராணி 2ம் எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சீனாவுக்கு அனுமதி மறுத்துள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். அவரது இறுதி சடங்கு வரும் திங்கள்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக, உலக நாடுகளின் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலை பார்க்க சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல் விவகாரத்தில் சீன அதிகாரிகள் மீது இங்கிலாந்து பொருளாதார தடை விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தை சேர்ந்த 5 எம்பி.க்கள் உள்பட 9 தனிநபர்கள் மற்றும் 4 அறக்கட்டளை அமைப்புகளின் மீது சீனா பொருளாதார தடை விதித்தது. இதுவே, தற்போது சீன தூதர்கள் ராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்க காரணம் என்று இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் மற்றும் பொதுநலன் மேம்பாட்டு அலுவலகம் ஆகியவை தெரிவித்துள்ளன. அதே நேரம், சீன பிரதிநிதி ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இங்கிலாந்து, சீனா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இது மேலும் சிக்கலை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.*14 மணி நேரம் காத்திருந்து அஞ்சலிஇங்கிலாந்து ராணியின் உடலுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த குழந்தைகள் முதல் முதியோர் வரை, சக்கர நாற்காலியில் இருந்த படியும் 8 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில், 14 மணி நேரம் காத்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். இந்த வரிசையானது நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து சவுத்வார்க் பூங்கா வரை நீண்டிருந்தது. அவருக்கு மரியாதை செலுத்திய இந்திய வம்சாவளியினர், “ராணியை நாங்கள் நேசித்தோம். ஏன் உலகமே அவரை நேசித்தது. அவர் ராணிக்கு எல்லாம் ராணி. அன்பிற்கு விலை துக்கம் தான். அவரை நேசித்த நாங்கள் துயருகிறோம்,’’ என தெரிவித்தனர்….

The post ராணி 2ம் எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சீனாவுக்கு திடீர் தடை: இறுதி சடங்கில் மட்டும் பங்கேற்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : China ,Queen Elizabeth 2 ,london ,uk ,elizabeth2 ,Queen 2 ,Elizabeth ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன