- பெப்சி
- சென்னை
- தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பேரவை
- தயாரிப்பாளர் சங்கம்
- தமிழக திரைப்பட தொழிலாளர் கூட்டம
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் – பெப்சி அமைப்புக்கும் இடையே சம்பள விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்தது. இதன் காரணமாக தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பைத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ‘பெப்சி’ அமைப்பு, 14-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்தது.
அதன்படி நேற்று சென்னை ராஜரத்தினம் அரங்கு அருகே பெப்சி அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் என எந்த பணிகளும் நடைபெறவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதில் பேசிய பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, “இன்றைக்கு ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி படங்களின் படப்பிடிப்பு எல்லாம் நின்று போயிருக்கு. இது யாரால்? தயாரிப்பாளர் சங்கத்தால தான். தயாரிப்பாளர் சங்கம் நான்காக பிரிந்து இருக்கிறது.
இதை ஒன்று சேர்க்க எங்கள பல்ல புடிச்சு பாக்குறீங்க. இன்னைக்கு 300, 400 படங்கள் வெளிவராமல் இருக்கிறது. அதை சரி செய்யாமல் எங்களுக்கு போட்டியாக ஒரு சங்கம் ஆரம்பிக்கிறேன் என்று இறங்கி இருக்கீங்க’’ என ஆவேசமாக பேசினார்.