×

சூர்யாவுடன் போட்டியை தவிர்த்த கார்த்தி

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் சூர்யா 45 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டம் உள்ளதாம். அப்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யா 45 திரைப்படம் வெளியாகும் பட்சத்தில் கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. கார்த்தி, மாளவிகா மோகனன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகையில்தான் ரிலீசானது. அதேபோல ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிடும் முடிவை படக்குழு எடுத்தார்களாம். ஆனால் சூர்யாவின் படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாவதால் ‘சர்தார் 2’ தள்ளிப்போட கார்த்தி கூறியுள்ளாராம்.

Tags : Karthi ,Suriya ,Chennai ,RJ Balaji ,Diwali festival ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை