×

உத்தர பிரதேசத்தில் தொடரும் கொடூரம் தாழ்த்தப்பட்ட 2 சகோதரிகள் பலாத்காரம் செய்து கொலை: 6 பேர் கைது

லக்கிம்பூர் கேரி: உத்தரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 2 சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இப்பிரிவை சேர்ந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், கொலை செய்யப்படும் சாதாரணமாக நடக்கிறது. நேற்று முன்தினமும் இம்மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் மாவட்டத்தில் 2 சகோதரிகள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இது பற்றி விவரம் வருமாறு: லக்கிம்பூர் கேரி மாவட்டம், லால்பூர் மஜ்ரா தமோலி பூர்வா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 15 மற்றும் 17 வயதுடைய அக்கா, தங்கை இருவரும் நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டில் இருந்து அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு சென்றனர். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது, வீட்டில் இருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள கரும்பு தோட்டத்தில் மரம் ஒன்றில் சகோதரிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து லக்கிம்பூர் கேரி காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் கூறுகையில், ‘இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனான ஜூனைத், போலீசாரை தாக்கியபோது துப்பாக்கியால் காலில் சுடப்பட்டு பிடிக்கப்பட்டான்,’’ என்றார். இவன் உட்பட 6 பேர் தங்கள் வீட்டுக்கு பைக்கில் வந்ததாகவும், தங்கள் மகள்களை தூக்கி பைக்கில் கடத்தி சென்றதாகவும் சகோதரர்களின் தாயார் கூறியுள்ளார்.* பெண்கள் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாதுகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘தலித் சிறுமிகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது கவலை அளிக்கிறது. பாலியல் பலாத்காரம் செய்தவர்களை மாலை அணிவித்து வரவேற்ற இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது,’ என்று கூறியுள்ளார். * பானையில் இருந்த நீரை குடித்தவர் மீது தாக்குதல்ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள திக்கா என்ற இடத்தில், சதுராராம் என்பவர் தனது மனைவியுடன் பைக்கில் சென்றார். அங்கு மளிகை கடைக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளார். இதனை பார்த்த கும்பல், அவர்களை சரமாரியாக தாக்கியது. உயர் ஜாதியினர் குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீரை தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த சதுராராம் குடித்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது….

The post உத்தர பிரதேசத்தில் தொடரும் கொடூரம் தாழ்த்தப்பட்ட 2 சகோதரிகள் பலாத்காரம் செய்து கொலை: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Lakhimpur Gari ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாளை விற்பனை செய்த...