×

குறுஞ்செய்தியில் வந்த லிங்க்கை தொட்ட துணி கடைக்காரரிடம் ரூ.70 ஆயிரம் அபேஸ்

பெரம்பூர்: குறுஞ்செய்தியில் வந்த லிங்க்கை தொட்டதால், துணிக்கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து 70 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர். புளியந்தோப்பு டி.கே.முதலி தெருவை சேர்ந்தவர் நெட்டின்சிங் (31). அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 20 நாட்களுக்கு முன்  உத்தரபிரதேச மாநிலம் மூத்தாபாத்தில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் 10  கை கடிகாரங்களை வாங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த 13ம் தேதி  நெட்டின்சிங்கை தொடர்புகொண்ட மர்ம நபர், ‘‘தங்களுக்கு கூரியர் வந்துள்ளது’’  என்று தெரிவித்து ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து, சர்வீஸ் சார்ஜாக வெறும் 5  ரூபாய் மட்டும் அனுப்பி வையுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து,  அந்த நபர் தெரிவித்த நம்பருக்கு கூகுள் பே மூலம் உடனடியாக 5 ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.இந்த நிலையில், நேற்று மதியம் அதே எண்ணில்  இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இருந்த லிங்க்கை தொட்டவுடன்  நெட்டின்சிங் வங்கி கணக்கில் இருந்து 70 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது  என்று குறுஞ்செய்தி வந்தது. இதைக்கண்ட அதிர்ச்சியடைந்த அவர், ஏற்கனவே 5 ரூபாய் அனுப்பிவைத்த நம்பருக்கு தொடர்புகொண்டபோது எந்த  பதிலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நெட்டின்சிங் கொடுத்த புகாரின்படி, பேசின்பிரிட்ஜ் போலீசார் குறிப்பிட்ட அந்த நம்பரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘’ஆன்லைன்  மூலம் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், எந்தவித தனியார்  கம்பெனிகளில் இருந்து வரும் லிங்க் தொடர்புகளை தொடவேண்டாம். அவற்றை பார்க்க  வேண்டாம்’’ என்று போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் பொதுமக்கள் பணத்தை  இழப்பது தொடர்கதையாகி வருகிறது….

The post குறுஞ்செய்தியில் வந்த லிங்க்கை தொட்ட துணி கடைக்காரரிடம் ரூ.70 ஆயிரம் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Linki ,Abe ,Dinakaran ,
× RELATED புளியந்தோப்பில் வெள்ளநீரில் மிதந்த பெண் உடல் மீட்பு