×

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

தாஷ்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் சென்றிருக்கும் இந்திய பிரதமர் மோடி இன்று ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்களையும் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை மேற்கொள்ள இருக்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், துருக்கிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாட்டின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற கடைசி உச்சி மாநாடு கடந்த 2019 ல் நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று நீங்கியதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநாட்டில் தலைவர்கள் நேரடியாக பங்கெடுத்திருக்கிறார்கள். இதற்காக உஸ்பெகிஸ்தான் சென்ற சீனா அதிபருக்கு விமான நிலையத்தில் பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.இதேபோல உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா அரிப்போ வரவேற்றார். அதேபோல ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளனர். உலக தலைவர்களை வரவேற்கும் விதமாக அங்கு கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. நேற்று தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீனா, ரஷ்யா நாடுகளின் அதிபர்கள் பங்கேற்று பேசினர். இன்று நடைபெறும் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதனிடையே உஸ்பெகிஸ்தானில் குடியரசு தலைவர் மற்றும் ரஷ்ய அதிபரை நேரில் சந்தித்தும் மோடி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கிய பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபரை சந்தித்து பேசும் நிகழ்வு என்பதால் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.     …

The post ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு! appeared first on Dinakaran.

Tags : Modi ,Shanghai Cooperation Conference ,Tashkent ,Uzbekistan ,President ,Putin ,Dinakaran ,
× RELATED மோடி அரசால் சீரழிக்கப்பட்ட...