×

சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பு; செங்கோட்டை-விருதுநகர் இடையே இரட்டை அகல ரயில்பாதை அவசியம்: பயணிகள், வர்த்தகர்கள் வலியுறுத்தல்

விருதுநகர்: சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், செங்கோட்டை விருதுநகர் இடையே இரட்டை அகல ரயில்பாதை அமைக்க வேண்டும் என பயணிகள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொல்லம்-செங்கோட்டை-தென்காசி-திருநெல்வேலி வழித்தடம் 1904 ஆண்டிலும், தென்காசி- சங்கரன்கோவில் – ராஜபாளையம் – விருதுநகர் ரயில் வழித்தடம் 1927ம் ஆண்டிலும் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக தொடங்கப்பட்டது. இதில், செங்கோட்டை விருதுநகர் 2004ம் ஆண்டிலும், தென்காசி – திருநெல்வேலி ரயில் வழித்தடம் 2012ம் ஆண்டிலும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.122 கிமீ நீளம் கொண்ட தென்காசி – விருதுநகர் ரயில் வழித்தடத்தில் பொதிகை, கொல்லம் மெயில், 3 பயணிகள் ரயில்கள் உள்ளிட்ட 5 ரயில்கள் தினசரியாகவும், சிலம்பு வாரம் மும்முறை, திருநெல்வேலி – தாம்பரம், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி ரயில்கள் வாராந்திர ரயில்களாகவும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தென்காசி செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் 12 ஜோடி ரயில்கள் தற்போது இயங்கி வருகின்றன. இதில் காலை மற்றும் மாலை வேளைகளில் கிராசிங்காக ரயில்கள் அரை மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்படும் நிலை உள்ளது. குறிப்பாக காலை 7 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் ரயிலானது மதுரை சென்றடைவதற்குள் கடையநல்லூர் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்களுக்கு இடையே 3 ரயில்கள் கிராசிங்கை கடந்து மதுரை சென்றடைவதற்குள் மணிக்கணக்கில் தாமதம் ஏற்படுகிறது. அதைப்போல மதுரையில் மாலை 5.15 மணிக்கு புறப்படும் ரயிலானது செங்கோட்டை சென்றடைவதற்குள் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தினசரி மணிக்கணக்கில் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 9.10 மணிக்கு செங்கோட்டை சென்றடைய வேண்டிய மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில், 2 மணி நேரம் காலதாமதமாக இரவு 11.10 மணிக்கு சென்றடைந்தது.இரட்டை அகலரயில் பாதை அவசியம்ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவதற்கும், அதிகப்படியான ரயில்களை இயக்குவதற்கும், இரட்டை அகல ரயில் பாதை மிகவும் அவசியமாகிறது. தற்போது சென்னையில் இருந்து மதுரை வரை முழுமையாக இரட்டை அகல ரயில் பாதை பணிகள் முடிந்து ரயில்கள் காலதாமதமின்றி இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல மதுரையிலிருந்து திருநெல்வேலி வரை 90 சதவீத இரட்டை அகல ரயில்பாதை முடிந்துள்ளது. இன்னும் ஒரு வருடத்தில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை அகல ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிந்து பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.எனவே, உடனடியாக விருதுநகர் செங்கோட்டை இடையே 130 கிமீ நீளத்திற்கு இரட்டை அகல ரயில் பாதை அமைக்க சர்வே எடுக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். அப்போதுதான் நிலம் கையகப்படுத்துதல் பணிகள் தொடங்கி இரட்டை ரயில் பாதை முடியும் வரை ஏறத்தாழ பத்து ஆண்டுகள் எடுக்கும். இது தொடர்பாக தென்மாவட்ட எம்பிக்கள் குரல் கொடுக்கவும் கோரிக்கை வலுத்து வருகிறது.இது குறித்து பயணிகள் கூறும்போது, ‘‘தற்போது பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக அதிகப்படியான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கில் ரயில்வேக்கு வருமானமும் குவிக்கின்றது. தென்காசி வழியாக திருநெல்வேலி – தாம்பரம், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி, குருவாயூர் – மதுரை, திருநெல்வேலி – மங்களூர், திருநெல்வேலி – கொல்லம், திருநெல்வேலி – பெங்களூர், கொல்லம் – திருப்பதி, கொல்லம் – விசாகப்பட்டினம், கொல்லம் – ஐதராபாத் ரயில்கள் வருங்காலத்தில் இயங்க இருக்கின்றன. எனவே, எதிர்கால ரயில் தேவைகளை கருத்தில் கொண்டு உடனடியாக செங்கோட்டை விருதுநகர் இரட்டை அகல ரயில் பாதை அமைப்பதற்கு சர்வே பணியை உடனடியாக தொடங்க வேண்டும். இதில், முதல் கட்டமாக செங்கோட்டை தென்காசி இடையே 8 கிமீ நீளம் அதிக போக்குவரத்து நெருக்கடி கொண்ட பாதை போர்க்கால அடிப்படையில் உடனடியாக அமைக்க வேண்டும்’’ என்றனர்….

The post சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பு; செங்கோட்டை-விருதுநகர் இடையே இரட்டை அகல ரயில்பாதை அவசியம்: பயணிகள், வர்த்தகர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sengottai-Viruthunagar ,Virudhunagar ,Red Fort ,Sengottai-Virudunagar ,Dinakaran ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு