×

போர் பதற்றம்: வரலட்சுமி பட புரமோஷன் தள்ளிவைப்பு

சென்னை: கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தி வெர்டிக்ட்’. கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார். அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யூலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் நடித்துள்ளனர். இம்மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா, எடிட்டர் சதீஷ் சூர்யா. ஏற்கெனவே இந்த படத்தின் செகண்ட் சிங்கிளான ‘திருடா’ என்ற பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் நிலவிவரும் போர்ப் பதற்றம் காரணமாக செகண்ட் சிங்கிள் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Varalakshmi ,Chennai ,Krishna Shankar ,Prakash Mohan Das ,Agni Entertainment ,Varalakshmi Sarathkumar ,Sruthi Hariharan ,Sukhasini ,Vidyulekha Raman ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு