×

கொந்தகை ஆய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் நெல்மணிகள் படையல் கண்டெடுப்பு

சிவகங்கை: கொந்தகை புதைவிட தள ஆய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் முதல் முறையாக நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், கொந்தகை புதைவிட தளத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வில் 35 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த மாதம் ஒரு தாழியை திறந்து ஆய்வு செய்த போது 74 சூது பவள மணிகள் கிடைத்தன. புதைவிட தள ஆய்வில் முதன் முதலாக இவை கிடைத்துள்ளன என தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில் நேற்றிரவு முதுமக்கள் தாழிகள் திறந்து ஆய்வு செய்யப்பட்டன. இதில் தமிழக தொல்லியல் துறை ஆணையாளர்(பொ) சிவானந்தம், இணை இயக்குனர் (கீழடி அகழாய்வு) ரமேஷ், அஜய், காவ்யா, சுரேஷ் ஆகியோர் ஈடுபட்டனர். இவற்றில் ஒரு முதுமக்கள் தாழியில் இறந்தவரின் எலும்புகளுடன் வைக்கப்பட்டிருந்த 19 சுடுமண் குடுவைகளில் இறந்தவருக்கு பிடித்தமான பொருட்கள் படையல் வைத்து புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுடுமண் குடுவைகளில் நெல் மணிகளும் வைத்து படையல் செய்துள்ளது, மக்கிய நிலையில் நெல் உமிகள் மூலம் தெரியவந்துள்ளது. புதைவிட அகழாய்வில் முதன் முதலாக நெல் உமி கிடைத்துள்ளதால் தொல்லியல் துறை ஆய்வாளர்கள்  மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்….

The post கொந்தகை ஆய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் நெல்மணிகள் படையல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Kontagai ,Sivagangai ,Kontakhai ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்