×

பொள்ளாச்சி இளநீருக்கு கிராக்கி வெளியூருக்கு அனுப்பும் பணி தீவிரம்: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு அதன்  சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடை செய்யப்படும் செவ்விளநீர் மற்றும் பச்சை நிற இளநீர் உள்ளிட்டவை,  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும்,  விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் கொரோனா ஊரடங்கால் கட்டுப்பாடு அதிகமாக இருந்தது. இதனால், அந்நேரத்தில் குறைவான இளநீரே விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்,  பருவமழையால் இளநீர் உற்பத்தி அதிகரித்தாலும் அந்நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையாலும் இளநீர் விலை மிகவும் சரிந்தது. மேலும், விற்பனை மந்தமாகி தோட்டங்களில் இளநீர் தேக்கத்தால்,  ஒரு இளநீர் பண்ணை விலையாக ரூ.17 ஆக சரிந்துள்ளது. இந்த விலை கட்டுப்படியாகாமல் விவசாயிகள் வேதனையடைந்தனர். இதைதொடர்ந்து, இந்த ஆண்டில் மார்ச் மாதத்திலிருந்து இளநீரின் விலை உயர ஆரம்பித்தது. அண்மையில் தென்மேற்கு பருவமழையின்போது வெளியூர்களுக்கு இளநீர் அனுப்பும் பணி மந்தமானது. கடந்த ஒரு மாதமாக மழை பெய்தாலும், இடையிடையே சில வாரங்கள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்துக்கும் பொள்ளாச்சியிலிருந்து அதிகளவு இளநீர் அனுப்பி வைக்கும் பணி நாளுக்கு நாள் அதிகரித்தது. அதிலும், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பால்  கனரக வாகனங்கள் மூலம், நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டரை லட்சம் வரையிலான இளநீர் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இளநீருக்கு மேலும் கிராக்கி அதிகமானதையடுத்து, தற்போது, தோட்டங்களில் நேரடி விலையாக ஒரு இளநீர் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது. மீண்டும் இளநீருக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு விலை உயர்வால், தென்னை  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். …

The post பொள்ளாச்சி இளநீருக்கு கிராக்கி வெளியூருக்கு அனுப்பும் பணி தீவிரம்: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Anaimalai ,Kinathukkadavu ,Dinakaran ,
× RELATED டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது