×

சிவந்த இதழ்களுக்கு சீக்ரெட் லிப் பாம்!

தேவையானவை

தேன் மெழுகு – 2 டீஸ்பூன் தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் – சில துளிகள் புதினா எண்ணெய் – 1 துளி பெட்ரோலியம் ஜெல்லி – 2 ஸ்பூன் மாதுளை அல்லது பீட்ரூட் சாறு – 1 டீஸ்பூன்.

செய்முறை

முதலில் தேன் மெழுகு மற்றும் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை சேர்த்து உருகும் அளவிற்கு லேசாக சூடுபடுத்துங்கள். பின்னர் நன்றாக கலக்கி இதில் புதினா எண்ணெய் ஒரு சொட்டு விடவும். அதன்பின் மாதுளை அல்லது பீட்ரூட் சாறினை கலந்து அவற்றை ஒரு டப்பியில் போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள். இதனை உடனடியாக ஃப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து உபயோகப்படுத்தலாம். தேவைப்படும்போது உபயோகித்து மீண்டும் குளிர் சாதனப்பெட்டியில் வைத்துவிட்டால், நிறைய நாட்களுக்கு வரும். தினமும் உபயோகித்தால் உங்கள் உதட்டின் கருமை மாறி, அழகு பெறும்….

The post சிவந்த இதழ்களுக்கு சீக்ரெட் லிப் பாம்! appeared first on Dinakaran.

Tags : Balm ,Dinakaran ,
× RELATED குற்றாலம் கோயிலில் 48 வகை மூலிகைகளுடன்...