×

மனைவி பிரிந்த வேதனை கணவர் தற்கொலை

பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ்.முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (37), பெயின்டர். இவரின் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 7 வயதில் சந்தோஷ் என்ற மகன் உள்ளார். கணேசன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் மீண்டும் பிரச்னை செய்ததால் மணிமேகலை கோபித்துக் கொண்டு  தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சல் அடைந்த கணேசன், நேற்று முன்தினம் காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடன் வேலை செய்யும் வெங்கடேசன் என்பவர் வந்தபோது வீட்டின் உள்ள இரும்பு பைப்பில் சேலையில் தூக்குமாட்டி கணேசன் இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.பேசின்பிரிட்ஜ் போலீசார் கணேசனின் சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி னர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post மனைவி பிரிந்த வேதனை கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,MS Muthu Nagar ,Pulyanthopu Kanikapuram ,Manimekalai ,
× RELATED வெடித்து சிதறிய மின்பெட்டி