×

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நரிக்குறவர்கள் நன்றி: பாசிமணி மாலை அணிவித்து மகிழ்ச்சி..!!

விருதுநகர்: விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நரிக்குறவர் மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி கூறினர். விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது அவர்களுடன் முதல்வர் தேநீர் அருந்தினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நரிக்குறவர்கள் பாசிமணி மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மலை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கக் கோரி கடந்த மார்ச்சில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியிருந்தார். மிகவும் நலிவுற்ற, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சமூகங்களில் ஒன்று நரிக்குறவர் சமூகம். பழங்குயினருக்கு வழங்கப்படும் அரசியல் சட்ட பாதுகாப்பு, நலத்திட்டங்களைப் பெற தகுதியானவர்கள் நரிக்குறவர்கள் என கடிதத்தில் தெரிவித்திருந்தார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நரிக்குறவர் மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்….

The post நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நரிக்குறவர்கள் நன்றி: பாசிமணி மாலை அணிவித்து மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Narikavar ,Basimani ,Virudunagar ,G.K. Stalin ,
× RELATED சொல்லிட்டாங்க…