×

போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியை தூக்கில் தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் கண்ணாடி கடை  நடத்தி வருகிறார். இவரது மனைவி லில்லி(32). இவர் உப்பிலியபுரம் அருகே உள்ள நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகிறது.  குழந்தைகள் இல்லை. இந்நிலையில் ஆசிரியர் மோகன்தாஸ் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போது, அதற்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை லில்லி மீது முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், மனஉளைச்சலில் இருந்த லில்லி நேற்று மண்ணச்சநல்லூர் சீதாலட்சுமி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் லில்லியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியை தூக்கில் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : POCSO ,Trichy ,Gunasekaran ,Thariyaur ,Trichy district ,Lily ,Dinakaran ,
× RELATED சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த...