×

மே 23ல் வெளியாகிறது வேம்பு

சென்னை: மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் எஸ்.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.  அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிறைய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வந்து வெற்றி காணும் உத்ரா புரொடக்சன்ஸ்- (ஹரி உத்ரா ) ‘வேம்பு’ படத்தை மே 23ம் தேதி தமிழகமெங்கும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியிடுகிறது. இன்னொரு பக்கம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளவும் ‘வேம்பு’ படம் அனுப்பப்பட்டு வருகிறது.

அந்தவகையில் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான வேம்பு, சிறந்த நடிகருக்கான விருதை ஹரிகிருஷ்ணனும், சிறந்த நடிகைக்கானை விருதை ஷீலாவும் பெற்றனர். இயக்குனர் ஜஸ்டின் பிரபு கூறும்போது, ‘‘மலையாளத் திரையுலகில் வெளியாகும் யதார்த்தப் படங்களை நாம் ஆஹா ஓஹோ எனக் கொண்டாடுகிறோம். தமிழில் வந்தாலும் அதை தியேட்டரில் பார்க்க வேண்டும். அதுபோன்ற ஒரு படம்தான் வேம்பு’’ என்றார்.

Tags : Chennai ,Golden Suresh ,Vijayalakshmi ,Justin Prabhu ,Madras ,Johnny) Harikrishnan ,Sheila ,Marimuthu ,Jayarao ,Karnan ,
× RELATED இலங்கை தமிழர்கள் உருவாக்கிய படம் தீப்பந்தம்