×

அதிமுகவில் தற்போது தலைமை சரியில்லை: பண்ருட்டி ராமச்சந்திரன்

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுகள் எடப்பாடிக்கு சாதகமாக வந்தாலும், உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்று அதிமுகவை மீண்டும் தன்வசம் கொண்டு வர ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து போராடி வருகிறார். இந்த நிலையில், சென்னையில் உள்ள அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீரென சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய அதிமுக நிலவரம் குறித்து இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன்; டிடிவி தினகரன், அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறார். சசிகலா சட்டரீதியில் அதிமுகவை மீட்க போராடுகிறார். ஓ.பி.எஸ், சசிகலாவின் நோக்கம் ஒன்றாக உள்ளது.  இபிஎஸ்-ஐயே வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது, அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை. தலைமையிலிருந்து இபிஎஸ்-ஐ மாற்றுவது தான் அதிமுகவை காப்பாற்றுவதற்கான ஒரே வழி என அவர் கூறினார். அவரின் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவை தடுக்க முடியாது” அதிமுக முக்கியமான நெருக்கடியில் உள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற 3 தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது” எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தொடர்ந்து வழிநடத்தினால் கட்சி அழிந்துவிடும். அதிமுகவில் தற்போது தலைமை சரியில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வைத்து இயக்கத்தை சீரழிக்கக் கூடாது. முதலில் கட்சியை சரி செய்துவிட்டு, பிறகு மக்கள் ஆதரவை பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்….

The post அதிமுகவில் தற்போது தலைமை சரியில்லை: பண்ருட்டி ராமச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : parrutti ramachandran ,Chennai ,Edabadi Palanisamy ,Adhimukavu, O.C. ,panneisselvam ,Panruti Ramachandran ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...