×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இயற்கை விவசாய காய்கறியில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம்: தேவஸ்தானம் ஏற்பாடு

திருமலை: திருமலையில் உள்ள அன்னமையா பவனில் ராயலசீமா மாவட்டங்களை சேர்ந்த இயற்கை விவசாயிகளுடனான சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி தேவஸ்தான செயலதிகாரி தர்மா ரெட்டி பேசியதாவது: நோய் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை இலக்காக கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகளை சாகுபடி செய்வதில் இயற்கை விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். கடந்தாண்டு ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பொருட்களை கொண்டு  வெங்கடேஸ்வர சுவாமிக்கு நைவேத்தியம் தயாரிக்க தொடங்கினோம். இதேபோல், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னப்பிரசாதம் தயாரிப்பிலும் இதை விரிவுபடுத்த விரும்புகிறோம். இயற்கை விவசாய பொருட்கள் மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட சுவையான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளோம். இது இயற்கை விவசாயிகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார். …

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இயற்கை விவசாய காய்கறியில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம்: தேவஸ்தானம் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Annabrasaam ,Tirupati Ethumalayan ,Tirumalai ,Royalaseema ,Annamaiah Bhawan ,Thirumalaya ,Annabrasaham ,Tirupati Ezemalayan Temple ,
× RELATED வீட்டை பூட்டி மருமகள் சாவியை...