×

நம்பர் கேமில் நம்பிக்கை இல்லை: சொல்கிறார் பிரியங்கா மோகன்

சென்னை: நம்பர் கேமில் நம்பிக்கையில்லை என்கிறார் நடிகை பிரியங்கா அருள் மோகன். டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களில் நடித்தவர் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன். இப்போது ஜெயம் ரவி ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். ராஜேஷ் எம் இயக்குகிறார். பிரியங்கா கூறியதாவது: மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்தேன். தெலுங்கிலும் நடித்து வருகிறேன். வேகமாக படங்களில் நடித்து, வேகமாக வளர்வதில் நம்பிக்கையில்லை. அதேபோல், நம்பர் கேமிலும் எனக்கு நம்பிக்கையில்லை. நல்ல கதை, நல்ல வேடம், நல்ல பேனரில் நடித்தால் போதும். அதுதான் நமக்கு பெயர் வாங்கித் தரும் என நம்புகிறேன்.இதைத் தவிர, பணத்துக்காக நடிப்பதில் உடன்பாடில்லை. அதனால்தான் நிறைய பட வாய்ப்புகளை மறுத்திருக்கிறேன். மெதுவாக நகர்ந்தாலும் ஸ்டெடியாக நிற்க வேண்டும். அதுதான் சினிமாவில் முக்கியம். டாக்டர், பிளாக் காமெடி படம். எதற்கும் துணிந்தவன் டவுனில் நடிக்கும் ஆக்‌ஷன் கதை. டான், கல்லூரி காதலும் காமெடியும் நிறைந்த படம். இப்படி ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் செய்திருக்கிறேன். ஜெயம் ரவியுடன் நடிக்கும் படம் வேறு மாதிரியாக இருக்கும். இவ்வாறு பிரியங்கா கூறினார்….

The post நம்பர் கேமில் நம்பிக்கை இல்லை: சொல்கிறார் பிரியங்கா மோகன் appeared first on Dinakaran.

Tags : Priyanka Mohan ,Chennai ,Priyanka Arul Mohan ,Dan ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...