×

மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் விழா கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாடர்ன் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்-கார்த்திகேயன் எம்எல்ஏ உறுதி

வேலூர் : வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியை மாடர்ன் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் எம்எல்ஏ கூறினார்.வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் தாமோதரன் தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா, முன்னாள் ஊராட்சி தலைவர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ கார்த்திகேயன் கலந்து கொண்டு 80 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:‘தமிழகத்தில் மற்ற துறைகளை விட கல்வித்துறைக்கு தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், மாணவிகள் உயர்கல்வி பயில ₹1000 உதவித்தொகை, காலை சிற்றுண்டி என பல திட்டங்களை வழங்கி வருகிறார். இதனை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். சிறப்பான திட்டங்களை முதல்வர் வழங்கி வருவதால் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கொணவட்டம் அரசு பள்ளிக்கென புதிய கட்டிடம், கலையரங்கம், நவீன கழிப்பறை ஆகியவற்றை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பள்ளியை மாடர்ன் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்’ இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்….

The post மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் விழா கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாடர்ன் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்-கார்த்திகேயன் எம்எல்ஏ உறுதி appeared first on Dinakaran.

Tags : Konavattam Government Higher Secondary School ,Karthikeyan MLA ,Vellore ,Konavattam Govt High School ,Karthikeyan ,MLA ,Dinakaran ,
× RELATED ₹2.15 கோடியில் புத்துயிர் பெறும் வேலூர்...