×

ஜோலார்பேட்டையில் முழுமை பெறாத ரயில்வே மேம்பாலத்தில் பயணிக்கும் பொதுமக்கள்-மின்விளக்குகள் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் முழுமை பெறாத ரயில்வே மேம்பாலத்தில் பொதுமக்கள் பயணித்து வருவதால் ரயில்வே நிர்வாகம் மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைத்து முறையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள பழைய பிரிட்ஜ் பகுதியில் கிழக்கு – மேற்கு பகுதிகளை இணைக்கும் ரயில்வே நடைமேடையாக இருந்து வந்தது. இதனால் ஒரு கிலோ மீட்டரை கடக்கும் வாகன ஓட்டிகள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிவரும் நிலை இருந்து வந்தது. இதனால் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கும் பல்வேறு பணி காரணங்களுக்காக பொதுமக்களும், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் பழைய பிரிட்ஜ் பகுதியில் நடைமேடையாக உள்ளதை வாகனங்கள் பயணிக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் துறை அதிகாரிகள் மூலம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் ₹21 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ரயில்வே மேம்பால பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரயில்வே மேம்பால பணி முடிந்துள்ளது. ஆனால் முறையாக மேம்பாலத்திற்கு பெயின்ட் மற்றும் மின் விளக்குகள் போன்ற பணிகள் முழுமை பெறாமல் இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ரயில்வே மேம்பால பணி முழுமை பெறாத நிலையில் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிவரும் நிலையை தவிர்த்து தாங்களே இந்த ரயில்வே மேம்பாலத்தில் பயணிக்கும் நிலையை உருவாக்கி பயணித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலை உள்ளதால் மேம்பாலத்தில் பயணிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் மேம்பாலத்திற்கு பெயின்ட் மற்றும் மின்விளக்குகள் போன்ற பணிகளை முழுமையாக முடிக்கப்பட்டு முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்….

The post ஜோலார்பேட்டையில் முழுமை பெறாத ரயில்வே மேம்பாலத்தில் பயணிக்கும் பொதுமக்கள்-மின்விளக்குகள் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Jolarpate ,Jolarbett ,Jolarbate ,Zolarbade ,
× RELATED ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட...