×

வரதட்சணையால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை கணவர், கொழுந்தனாருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை-நாகர்கோவில் மகிளா கோர்ட் தீர்ப்பு

நாகர்கோவில் : தேங்காப்பட்டணம் அருகே வரதட்சணை கொடுமையால் ரயில் முன்பு இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் கொழுந்தனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட் தீர்பளித்தது.குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தை அடுத்த வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் அஜிதா(30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்சன் என்பவருக்கும் கடந்த 2005 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ம்தேதி திருமணம் நடைபெற்றது.திருமணத்தின்போது அஜிதாவுக்கு 38 பவுன் நகை, ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம்,  சீர்வரிசை பொருட்கள், மாப்பிள்ளை ஜெஸ்டின்சனுக்கு 7 பவுன் தங்கச்சங்கிலி ஆகியவை  வரதட்சணையாக  கொடுத்துள்ளனர்.இவர்களுக்கு ஜெபிஷோ அபிஷேக்(5),ஜெபிஷா அபிஷேக்(4) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர்.இந்நிலையில் அஜிதாவின் கணவரின் தம்பி  நிக்சன் சாமுவேலுக்கு கல்லூரியில் பேராசிரியர் பணிக்காக 3 லட்சம் ரூபாய் தேவைபட்டுள்ளது. இதற்காக அஜிதாவிடம் கூடுதல் பணம் கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். இதில் மனவேதனை அடைந்த அஜிதா கடந்த 2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ம் தேதி வீட்டில் இருந்து  தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு  கன்னங்கோடு அருகே  ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் அஜிதாவின் பெற்றோர் புதுக்கடை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் மொத்தம் 33 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்ட அஜிதாவின் கணவர் ஜெஸ்டின்சன் மற்றும் அவரது தம்பி ஆகிய இருவருக்கும் தற்கொலைக்கு தூண்டியதாக பத்து ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கேட்டதற்காக இரண்டு ஆண்டும், அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதற்காக இரண்டு ஆண்டும் என மொத்தம் 14 ஆண்டு சிறைத்தண்டனையும்,15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டது….

The post வரதட்சணையால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை கணவர், கொழுந்தனாருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை-நாகர்கோவில் மகிளா கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kolandanar—Mahla Court ,Nagargo ,Nagarko ,Coconut Patanam ,Dowry ,Kolandanar-Mahla Court ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்