×

சாலை பாதுகாப்பு டி.20 தொடர்; சச்சின்-லாரா அணிகள் இன்று மோதல்

கான்பூர்: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்ரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு டி.20 கிரிக்கெட் தொடர் கான்பூரில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.  இதில் நேற்று நடந்த 5வது லீக் போட்டியில் தில்சான் தலைமையிலான இலங்கை, இயான் பெல் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 19 ஓவரில் 78 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக இயான்பெல் 15 ரன் அடித்தார். இலங்கை பவுலிங்கில் சனத் ஜெயசூர்யா 4 ஓவரில் 3 ரன் கொடுத்து 4விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய இலங்கை 14.3ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 79 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜெயசூர்யா ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீ்ழ்த்திய இலங்கைக்கு இது 2வது வெற்றியாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ், வெஸ்ட்இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது. ரெய்னா, யுவராஜ்சிங்,யூசுப், இர்பான் பதான், ஸ்டூவர்ட் பின்னி, ஹர்பஜன்சிங், முனாப் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். லாரா தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அந்த அணியில் டுவைன் ஸ்மித், டேரன் பவல், கிர்க் எட்வர்ட்ஸ், சுலைமான்பென், தேவேந்திர பிஷூ உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.  இந்த போட்டி ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் சினிப்ளக்ஸ் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. …

The post சாலை பாதுகாப்பு டி.20 தொடர்; சச்சின்-லாரா அணிகள் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Road safety T20 series ,Sachin ,Lara ,Kanpur ,Road Safety T20 Cricket Series ,India ,England ,Australia ,Sri Lanka ,WestIndies ,South Africa ,Road Safety T20 ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின்...