×

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே பள்ளிபேட்டை ஊராட்சியில் முத்துமாரியம்மன் கோயில்  கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், சுமார் 50 ஆண்டுகள் பழமையான கோயிலின் மூலவர், முன்புற மண்டபம், கோபுரம், விமானம் உள்ளிட்டவை கிராம மக்கள் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டன. விழாவிற்காக அமைக்கப்பட்ட யாகசாலையில் கடந்த 9ம் தேதி காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. அதனை தொடர்ந்து 10,11ம் தேதிகளில் வேத விற்பன்னர்களால் வேத மந்திரங்கள் முழங்க மூன்று கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று 4ம் கால பூஜைகள் நடந்தன. பின்னர், யாகசாலையில் இருந்து கலச கும்பங்கள் புறப்பட்டு மூலவர், விமானம், கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மகா அபிஷேகமும் சிறப்பு அலங்கார ஆராதனையும் நடந்தன. …

The post முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Muthumariamman Temple Kumbabhishekam ,Muthumariamman Temple Kumbabhishek ceremony ,Pallipet Panchayat ,Achirupakkam ,Muthumariyamman ,Temple ,Kumbabhishekam ,
× RELATED முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்