×

கும்பாபிஷேகம்

பொன்னேரி: பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தில் புகழ்பெற்ற மிகப் பழமையான  ஸ்ரீசௌந்தரவல்லி சமேத ஸ்ரீஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று பிரகஸ்பதி ஸ்ரீஊ.வே.சந்தான பட்டாச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பி.வி.வெங்கடரங்கம், பி.வி.கோவிந்தராஜ பட்டாச்சாரியார் முன்னிலை வகித்தார். இதன் தொடர்ச்சியாக நைமித்தக ஆராதனம், திருமஞ்சனம், யாகசாலை, நித்ய ஹோமம் உள்ளிட்ட கலச பூஜைகளுடன் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு கோபுர கலசங்களுக்கும் சௌந்தரவல்லி சமேத ஹரிகிருஷ்ண பெருமாளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அங்கு குழுமியிருந்த பக்தர்கள்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் பாஜ பொதுக்குழு உறுப்பினர் வி.பத்மநாபன், கேந்திர தலைவர் செல்வம், டிவிஎஸ் நிறுவன ராம்குமார், பி.எஸ்.நாராயணன், பி.மாதவன் உள்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்….

The post கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Srisoundaravalli ,Sametha Sriharikrishna ,Perumal ,Perumpedu ,
× RELATED பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட...