×

செல்போனில் நேரத்தை வீணடிக்காமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்-மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி எம்எல்ஏ பேச்சு

அணைக்கட்டு : அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட பொய்கை, ஊசூரில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பொய்கை ஊராட்சியில் நடந்த விழாவுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு துணைத்தலைவர் சித்ராகுமாரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ நந்தகுமார் கலந்து கொண்டு 480 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்போது பெண்கள் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தார்.அதை தொடர்ந்து ஊசூர் அரசு, ஆண்கள், பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், வேலூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவிசுரேஷ் (தெள்ளூர்), மாலதிசுரேஷ்பாபு(சேக்கனூர்) ஆகயோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ நந்தகுமார் பங்கேற்று 2 பள்ளகளில் படிக்கும் 289 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது ஆண்கள் பள்ளிக்கு சுற்றுசுவர் வசதி, மாணவர்கள் அமர கூடுதலாக இருக்கைகள் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கான ஏற்பாடு செய்வதாக எம்எல்ஏ உறுதியளித்தார்.தொடர்ந்து பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ நந்தகுமார் பேசுகையில், ‘12ம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் செல்போன், வாட்ஸ் ஆப் என சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றால் உங்களுக்கு கல்லூரியில் எளிதில் சீட் கிடைக்கும். உங்களை போன்ற ஏழை, எளிய கிராமபுறங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்க வசதியாக தாலுகாவுக்குட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் ஒரு அரசு கலை கல்லூரி அடுத்த ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த ஒரு டைட்டல் பார்க்கும் அமைய உள்ளது’ என்றார். இதில் மாவட்ட கவுன்சிலர் த.பாபு, பிடிஒக்கள் வின்சென்ட்ரேமஷ்பாபு, ராஜன்பாபு, வேலூர் ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரிகாசி, ஊசூர் ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் தசரதன், உதவி தலைமை ஆசிரியர்கள் பிரேமா, சரவணன், ஊசூர் பெண்கள் மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கரன், தெள்ளூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்….

The post செல்போனில் நேரத்தை வீணடிக்காமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்-மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Tags : Aamkatu ,Govt Boys ,Girls Higher Secondary School ,Poigai, Usur ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது