×

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்காகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் ஜெயமுருகன் (27). திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்மாபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் மாலதி (24). வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் கங்காகுளத்தில் வீடு எடுத்து தங்கி, திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். தற்போது மாலதி 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால், இருவீட்டாருக்கு தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த காதல் தம்பதியினர், நேற்று நள்ளிரவில் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தங்கல் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Karuppasamy ,Jayamurugan ,Gangakulam ,Virudhunagar district ,Tiruvilliputhur ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை