×

அறநிலைய கொடை சட்ட பிரிவுகளின் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் இணை ஆணையர்களுக்கு பகிர்வு: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை:  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை இணை ஆணையர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் ஆதாரப் பதிவேடுகள் தயாரித்தல், பதிவேடுகளை ஆண்டு தோறும் சரிபார்த்தல், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பதிவேடுகளை சமர்பித்தல், அறங்காவலர்கள் கணக்குகள் மற்றும் விவரங்களை அனுப்புதல், அறநிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தல், அறநிறுவனங்களில் வரவு செலவு திட்டம் அங்கீகரித்தல், அறநிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்தல், தணக்கை அறிக்கையின் உள்ளடக்கங்கள் மற்றும் சமர்பித்தல், தண்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல், அறங்காவலர் அல்லது செயல் அலுவலரை பொறுப்பில் அமர்த்துதல் மேற்கண்டவாறு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்ட பொருண்மைகளில் இணை ஆணையருக்கு அனுப்பப்படும் முன்மொழிவுகளை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பித்திட பின்பற்ற வேண்டிய வழிகாட்டு ெநறிமுறைகளை வரையறுத்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post அறநிலைய கொடை சட்ட பிரிவுகளின் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் இணை ஆணையர்களுக்கு பகிர்வு: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kumaraguruparan ,Chennai ,Commissioner ,Kumaragurubaran ,
× RELATED சென்னையில் 40 காவல் ஆய்வாளர்களை பணியிட...