×

ஆளுநர் மாளிகை பெயரையும் மாற்ற வேண்டியது தானே…? சசிதரூர் கிண்டல் கேள்வி

புதுடெல்லி: ‘ராஜ்பாத் பெயரை மாற்றியதை போல், ஆளுநர் மாளிகைகளின் பெயர்களையும், மாநிலங்கள் பெயரையும் மாற்ற வேண்டியதுதானே,’ என்று ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் அமைந்திருந்த ‘ராஜ்பாத்’ என்ற ராஜபாதை, பிரமாண்ட முறையில் அழகுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், ராஜபாதையின் பெயரை ‘கர்த்தவ்யா பாத்’ (கடமை பாதை) என்றும்  ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. கடமை பாதை திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘ராஜ்பாத் என்பது ஆங்கிலேய ஆட்சியின்போது இருந்த அடிமைதனத்தை வெளிப்படுத்துகிறது. எனவேதான், இந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ராஜ்பாத் பெயர் கடமை பாதை என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர் மாளிகைகளும் ராஜ்பவன் என்பதை ‘கர்த்தவ்யா பவன்’கள் என மாற்றப்படுமா?. இதேபோல், ராஜஸ்தான் மாநில பெயரையும் ‘கர்த்வ்யாஸ்தான்’ என ஒன்றிய அரசு மாற்ற வேண்டும்,’ என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்….

The post ஆளுநர் மாளிகை பெயரையும் மாற்ற வேண்டியது தானே…? சசிதரூர் கிண்டல் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Governor's House ,Sasitharur ,New Delhi ,Rajpath ,Governor's Houses ,Union Government ,
× RELATED 13 மாநிலங்களில் மக்களவை 2ம் கட்ட தேர்தல் 88 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு