×

மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை கரைப்பு விபத்து 20 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் 10 நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த மாதம் 31ம் தேதி  முதல் தொடங்கியது. நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து, பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்த பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்நிலையில், சிலைகள் கரைப்பின்போது பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 14 பேர் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி இறந்துள்ளனர். அகமத்நகர் மாவட்டத்தின் தோப்கானாவில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியபோது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மும்பையில் அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற்றது….

The post மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை கரைப்பு விபத்து 20 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ganesha statue meltdown ,Maharashtra ,Mumbai ,Vinayagar Chaturthi festival ,Ganesha ,
× RELATED மும்பையில் 14 பேர் பலியான சம்பவத்தில்...