×

ஒரே மேடையில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர், மாணவர்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மோகனசுந்தரம் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 1992ம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்து 8 பள்ளிகளில் கணித ஆசிரியராக பணியாற்றி 7,000 மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாக கற்று கொடுத்து அரசு தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியடைய வைத்து சாதனை படைத்தார். இதனால் தலைமை ஆசிரியர் மோகனசுந்தரத்துக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது. நல்லாசிரியர் சான்றிதழுடன் அரசு வழங்கிய ரூ.10 ஆயிரம் காசோலையை பள்ளி நிதிக்காக மோகனசுந்தரம் வழங்கியுள்ளார்.இதேபோல் மோகனசுந்தரத்திடம் படித்த பன்னாள் கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்ற மாணவர், கோகூர் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவர்களின் பன்முகத்திறனை வெளிப்படுத்தும் வகையில் சதீஷ் கல்வி கற்பித்து வருவதால் இவருக்கும் தமிழக அரசு நல்ல ஆசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஒரே கிராமத்தில் ஆசிரியர் மோகனசுந்தரம், இவரது மாணவர் ஆசிரியர் சதீஷ் ஆகியோர் கடந்த 5ம் தேதி சென்னையில் நடந்த விழாவில், ஒரே மேடையில் நல்லாசிரியர் விருதை பெற்றனர். …

The post ஒரே மேடையில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர், மாணவர் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Mohanasundaram ,Bannal village ,Nagai district ,Dinakaran ,
× RELATED நாகை அருகே தண்டவாளத்தில் படுத்து...