×

கர்நாடகா அரசு பள்ளியில் புல்லா சரக்கு அடிச்சிட்டு பாடம் நடத்திய ஆசிரியை: மேஜை டிராயரில் மது பாட்டில்கள்

துமகூரு: பள்ளியில் மது அருந்தியபடி மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், துமகூருவில் உள்ளது சிக்க சாரங்கி அரசு தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் 25 ஆண்டுகளாக கங்கலக்‌ஷம்மா என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் சமீப காலமாக தனிப்பட்ட பிரச்னையால் பள்ளிக்கு மது அருந்தி விட்டு வந்துள்ளார். பள்ளிக்கு மது பாட்டிலை கொண்டு வந்து மது அருந்தியபடி மாணவர்களுக்கு பாடமும் நடத்தியுள்ளார்.  இந்த தகவல் மாணவர்களின் பெற்றோருக்கு சென்றது. இதையடுத்து அவர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். ஆனால், ஆசிரியை திருந்தவில்லை. இந்நிலையில் பள்ளி கல்வித்துறைக்கு கிராம மக்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அதிகாரி ஹனுமநாயக்கா பள்ளியில் சென்று ஆய்வு செய்தார்.  அப்போது, கங்கலக்‌ஷம்மா பயன்படுத்தி வந்த மேஜையை திறந்து பார்த்த போது, டிராயரில் மது பாட்டில்கள் இருந்தன. இதையடுத்து, அதிகாரிகள் அவரை விசாரணைக்கு உட்படுத்தினர். அதில், அவர் மது அருந்தியது உண்மை என்று தெரிய வந்ததால், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.  ஆசிரியை ஒருவர், மது அருந்தியடி மாணவர்களுக்கு பாடம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post கர்நாடகா அரசு பள்ளியில் புல்லா சரக்கு அடிச்சிட்டு பாடம் நடத்திய ஆசிரியை: மேஜை டிராயரில் மது பாட்டில்கள் appeared first on Dinakaran.

Tags : Karnataka Govt. ,Dumakuru, Karnataka ,Karnataka government ,Dinakaran ,
× RELATED வாலிபருக்கு பாலியல் தொல்லை; பிரஜ்வல்...