×

டாக்டருக்குதான் படிக்கணும்ன்ற எண்ணத்தை கைவிடுங்க… மாணவர்களுக்கு எடப்பாடி அறிவுரை

சென்னை: கல்வி என்பது நம் எதிர்கால வாழ்க்கைக்கான திறவுகோல். மருத்துவ  படிப்புதான் நம் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்ற எண்ணத்தை மாணவ செல்வங்கள்  கைவிட வேண்டும் என்று எடப்பாடி கூறியுள்ளார்.இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த மாணவி லக்க்ஷனா ஸ்வேதா பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். மாணவி லக்க்ஷனா ஸ்வேதா தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் நீட்டை ஒழிக்க சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், திறமையையும் வளர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டன. குறிப்பிட்ட படிப்புதான் நம் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்ற எண்ணத்தை மாணவ செல்வங்கள் கைவிட வேண்டும் என்று, ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வாஞ்சையோடு வேண்டுகோள் விடுக்கிறேன். விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, படித்து பட்டம் பெற்று முன்னேறுவோம் என்ற வைராக்கியத்தை மாணவ செல்வங்கள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்தும் செய்யும் வரை மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, ஒன்றியங்கள்தோறும் இலவச பயிற்சி மையங்களை தொடங்கிவைத்து, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவ செல்வங்களுக்கு பயிற்சியையும், அதனுடன் மனப் பயிற்சியையும் சேர்த்து அளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post டாக்டருக்குதான் படிக்கணும்ன்ற எண்ணத்தை கைவிடுங்க… மாணவர்களுக்கு எடப்பாடி அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Etabadi ,CHENNAI ,Etapadi ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...