×

வெம்பக்கோட்டை அகழாய்வில் வண்ணம் தீட்டிய சங்கு வளையல் கண்டெடுப்பு

சிவகாசி :  வெம்பக்கோட்டை அகழாய்வில் அலங்காரத்துடன் கூடிய வண்ண சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதி அகழாய்வில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண் விளையாட்டு வட்ட சில்லுகள், சூதுபவளம், தக்களி, பானை, பொம்மைகள், புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன், டெரகோட்டாவால் ஆன குழந்தைகள் விளையாட்டு குவளை, திமில் உடைய காளையின் சிற்பம், விலங்குகளின் எலும்புகள், கொம்பு, கோடாரி கருவிகள், தங்க அணிகலன் போன்ற பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் சுடுமண்ணால் ஆன கற்களுடன் கூடிய சுவரும் தென்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே சாதாரணமான சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அழகிய அலங்காரத்துடன் கூடிய வண்ணம் தீட்டப்பட்ட சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் கூறுகையில், ‘‘வெம்பக்கோட்டை அகழாய்வில் சாதாரணமான சங்கு வளையல்கள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அலங்காரத்துடன் கூடிய வண்ணம் தீட்டப்பட்ட உடைந்த சங்கு வளையல் கிடைத்துள்ளது. இங்கு வசித்த முன்னோர்கள் சங்கு வாங்கி, இங்க வளையல்கள் தயாரித்து, ஏற்றுமதி செய்திருக்கக் கூடும். இதுவரையிலும் முழுமையான வளையல்கள் கிடைக்கவில்லை. உடைந்த வளையல்கள் மட்டுமே கிடைத்துள்ளன’’ என்றார்….

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் வண்ணம் தீட்டிய சங்கு வளையல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Wembakkotta ,Vembakotta ,Virudhunagar District ,Vijayagarisalkulam ,Maddukudu ,Dinakaran ,
× RELATED ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை...