×

கந்தர்வகோட்டை அருகே இடிந்து விழும் அபாயத்தில் புதுநகர் அங்கன்வாடி மையகட்டிடம்

*புதிதாக கட்டித்தர மக்கள் கோரிக்கைகந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டை அருகே பெயர்ந்து விழும் நிலையில் உள்ள புதுநகர் அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகர் கிராமத்தில் உள்ள அரசு அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி பல வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் கட்டிடங்கள் மிகவும் விரிசல் விட்டும், மேற்கூரை கான்கிரீட்டுகள் பெயர்ந்து கீழே விழுந்து வரும் நிலையிலும் மிகவும் அபாயகரமான நிலையில் இந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்கு புதுநகரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளதால் பெற்றோர்கள், குழந்தைகளை அங்கன்வாடிக்கு அச்சத்துடனே அனுப்பி வருகின்றனர், எனவே பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என புது நகர் கிராம பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதே பகுதியில் பல வருடங்களாக உபயோகமற்று சிதலமடைந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடத்தையும் இடிக்க வேண்டும்.புதுநகர் கிராமங்களில் சாலை ஓரங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்….

The post கந்தர்வகோட்டை அருகே இடிந்து விழும் அபாயத்தில் புதுநகர் அங்கன்வாடி மையகட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Pudunagar ,Anganwadi Centre ,Kandarvakotta ,Anganwadi ,Pudunagar Anganwadi ,Centre ,Dinakaran ,
× RELATED இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் 7 பேருக்கு மறுவாழ்வு!