×

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் துறை எச்சரிக்கை..!

சென்னை: பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் பைக் ரேஸ் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடும் நபர்களை  கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், போக்குவரத்து காவல் குழுவினருடன் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆளிநர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் இணைந்து சென்னையில், நேப்பியர் பாலம் முதல் அடையார் திரு.வி.கா.பாலம் வரை, இராதாகிருஷ்ணன் சாலை, வண்ணாரப்பேட்டை, மின்ட் மற்றும் வியாசர்பாடி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தீவிரமாக கண்காணித்து, மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 08.09.2022 அன்று அதிகாலை தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் 3 நபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கர வாகனங்களை இயக்கி சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில்  வெளியானது. இது குறித்து R-4 பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்தும் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 1.முகமது ஹாரிஷ், வ/19, த/பெ.நயிம் அகமது, எண்.87, முகமது பூர முதல் தெரு, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் 2.முகமது ஷாய்பான், த/பெ.சாய்ப் அகமது, எண்.15/9, NMH குடியிருப்பு,  மோட்டுக் கொள்ளை, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (10,09,2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.சென்னை பெருநகர காவல் துறையினர் ஏற்கனவே தொடர்ந்து பைக் ரேஸில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கைகள் விடுத்தும், பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும், மேலும் இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்களின் பெற்றோர்களையும் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் மற்றும் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், மீறி பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இளஞ்சிறார்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. …

The post சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் துறை எச்சரிக்கை..! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolis ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...