×

திருமுல்லைவாயலில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையால் விபத்து அபாயம்; பீதியில் மக்கள்

ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை சாலையில் வலது புறம் திரும்பி, சுதர்சனம் பிரதான சாலைக்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடை பள்ளம் திறந்த நிலையில் உள்ளது. திருமலைவாசன் நகர், காவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் உள்பட இப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் இந்த பாதாள சாக்கடை வழியாகத்தான் செல்கின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி, அந்த பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலை உள்ளது. இதனால் அப்பள்ளத்தில் யாரும் விழுந்து விட கூடாது என்பதற்காக, அதை சுற்றிலும் தகரத்தாலான தடுப்புகளை அப்பகுதி மக்கள் வைத்துள்ளனர். பாதாள சாக்கடை மூடி அமைத்து விபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அபாய நிலை கருதி பாதாள சாக்கடையில் மூடி அமைத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்….

The post திருமுல்லைவாயலில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையால் விபத்து அபாயம்; பீதியில் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Awadi ,Thirumullaivayal ,
× RELATED அரசு கலைக்கல்லூரி சாலையில் வாகனங்கள்...