×

டிவிட்டரிலிருந்து விலகினார் ராசி கன்னா

சென்னை: அடங்க மறு, அயோக்யா, இமைக்கா நொடிகள், சங்கத் தமிழன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராசி கன்னா. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கார்த்தி ஜோடியாக சர்தார் படத்தில் நடிக்கிறார். இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் யோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தி வெப்சீரிஸ் ஒன்றிலும் ஷாகித் கபூருடன் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் திடீரென டிவிட்டரிலிருந்து விலகியுள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் ராசி கன்னா வெளியிட்ட பதிவில், ‘எனது டிவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன். ஆனால் நான் உங்களுடன் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். நன்றி’ என தெரிவித்திருக்கிறார்.சில நாட்களுக்கு முன் தென்னிந்திய சினிமா பற்றி சில கருத்துகளை டிவிட்டரில் ராசி கன்னா தெரிவித்தார். இதையடுத்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனாலேயே அவர் டிவிட்டரிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது….

The post டிவிட்டரிலிருந்து விலகினார் ராசி கன்னா appeared first on Dinakaran.

Tags : twitter ,Rasi Kanna ,
× RELATED ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் டிவிட்டர் கணக்கு முடக்கம்